தூபி மேல் ஏறிய 2 முஸ்லிம் மாணவர்களுக்கும் தொடர் விளக்கமறியல்!

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பழமையான தூபி ஒன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்த இரண்டு இளைஞர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. 

இரண்டு மாணவர்களையும் எதிர்வரும் 27ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க அநுராதபுரம் பிரதான மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் ஜனக பிரசன்ன சமரசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார். 

மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இரண்டு இளைஞர்களே சம்பவத்தில் கடந்த 14ம் திகதி கைது செய்யப்பட்டனர். 

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களும் மிஹிந்தலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

தூபி மேல் ஏறிய 2 முஸ்லிம் மாணவர்களுக்கும் தொடர் விளக்கமறியல்! தூபி மேல் ஏறிய 2 முஸ்லிம் மாணவர்களுக்கும் தொடர் விளக்கமறியல்! Reviewed by Ceylon Muslim on February 21, 2019 Rating: 5