தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 11, 2019

மதூஷ குழுவை, டுபாயில் சிறையில் வைப்பதே புத்திசாலித்தனமானதுபாதாள உலக தலைவர்களுள் ஒருவரான மாகந்துரே மதூஷை கைது செய்ததன் மதிப்பு நிச்சயமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கே உரியது எனவும், டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மதூஷ் உட்பட சந்தேகநபர்களை அந்த நாட்டிலேயே சிறையில் வைப்பதே புத்திசாலித்தனமானது எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வந்தால் பல்வேறு தந்திரங்களைப் பிரயோகித்து சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், பாதாள உலக கூட்டத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது எனவும் இராணுவத்தளபதி கூறியுள்ளதாக இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் பாதாள உலக கூட்டத்தை அடியோடு பிடிப்பதற்கும், போதைப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கும் முடியுமாகவுள்ளதற்கு எஸ்.ரி.எப். படைப் பிரிவின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லத்தீப் எடுக்கும் ஆர்வம் மிக முக்கியமானது என்பதுடன் அவரது சேவைக் காலம் நீடிப்பும் விசேட அம்சமாகும் எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages