உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

உருளைக்கிழங்குக்கானஇறக்குமதி வரி, இன்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், 20 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணம், நாடு முழுவதும் உருளைக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், விளைச்சல் காலத்தில் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கக்கோரி, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந்தக் கோரிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டதையடுத்து, உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரியை 20 ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்குமாறு, விவசாய அமைச்சர் பி.ஹரிசனுக்கு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதையடுத்தே, இந்த வரி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது என, வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு! உருளைக்கிழங்குக்கான  இறக்குமதி வரி அதிகரிப்பு! Reviewed by Ceylon Muslim on February 02, 2019 Rating: 5