தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

காத்தான்குடி தாருல் அத்தர் அத்தஅவிய்யா ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் போதை ஒழிப்பு மாநாடு

(S. சஜீத்)
காத்தான்குடி தாருல் அத்தர் அத்தஅவிய்யா ஏற்பாட்டிலிலும் காத்தான்குடி நகரசபை அனுசரணையோடும் "போதையற்ற நகரைக் கட்டியெழுப்புவோம் போதைவஸ்துக்களை விட்டும் எம் சமூகத்தைப் பாதுகாப்போம்" எனும் தொணிப் பொருளில் மாபெரும் போதை ஒழிப்பு மாநாடு (01.02.2019)  மாலை 6 மணிமுதல் இரவு 10.30 மணிவரை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இம் மாநாட்டில் "போதையும் இறை நம்பிக்கையும்"  எனும் தலைப்பினில் அஷ்ஷெய்க். அப்துல் கணி (ஹாமி) அவர்கள் மற்றும் "நெருங்கி வரும் மறுமையும் அதிகரித்துச் செல்லும் போதைப் பொருள் பாவனையும்"  எனும் தலைப்பினில்  அஷ்ஷெய்க். நியாஸ் ஸித்தீக் (ஸிராஜி) அவர்களும்  "போதை வஸ்துக்களும் சமூக பாதிப்புக்களும்" எனும் தலைப்பனில்  அஷ்ஷெய்க். முர்ஸித் (அப்பாஸி) ஆகியோர்கள் கலந்து கொண்டு இதன்போது சிறப்பு மார்க்க சொற்பொழிவாற்றினர்.

இம் மாநாட்டில் ஆண்கள், பெண்கள் உற்பட பல நூற்றுக் கணக்கானோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages