க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத் தரப்பினர் அமைச்சரவைப் பத்திரமொன்றினை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டில் ஏராளமான பட்டதாரிகள் தொழிலற்ற நிலையில் இருக்கும் போது, உயர்தரத்தில் தகைமை கொண்டவர்களுக்கு தொழில் வழங்கும் திட்டம் பொருத்தமானதாக இல்லை எனத் தெரிவித்து, அரசாங்கத் தரப்பினர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை, பின்னர் தாக்கல் செய்யும் பொருட்டு, அரசாங்கத் தரப்பினர் மீளப்பெற்றனர்.
க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார் Reviewed by Ceylon Muslim on February 15, 2019 Rating: 5