கோட்டாவே அடுத்த ஜனாதிபதி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவாரெனும் இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்துவிட்டதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பாக இந்த இரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன.
எனினும், தற்போது கோட்டாபய ராஜபக்ஷவே மிகப் பொருத்தமான வேட்பாளர் என்று இரண்டு தரப்புகளும் புரிந்து கொண்டுள்ளன.
இருந்தாலும், இறுதியான முடிவு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலேயே உள்ளது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...