சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு - யாழில் நாளை போராட்டம்!

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு  - யாழில் நாளை போராட்டம்!

சுதந்திர தினத்திற்கு எதிர்பு வெளிப்படுத்தும் வகையில் யாழ். பஸ் நிலையம் முன்பாக நாளை (04) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் நாளை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளதாக அவ் இயக்கத்தின் அமைப்பாளர் யூட் தெரிவித்தார். 

போலி சுதந்திர தினம் எமக்கு வேண்டாம் என்ற தொணிப் பொருளில் இவ்வார்ப்பாட்டமானது காணாமல் ஆக்கப்பட்ட உறவுளை தேடித்தருமாறும், நீண்ட காரமாக சிறையில் தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு - யாழில் நாளை போராட்டம்! சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு - யாழில் நாளை போராட்டம்! Reviewed by Ceylon Muslim on February 03, 2019 Rating: 5