கல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சி - பந்துல

கல்வியை தனியார் மயப்படுத்தும் முயற்சி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமைாயான கவனம் செலுத்த வேண்டும் என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளார்.

எமது நாட்டில் 44இலட்சம் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். 02இலட்சத்திற்கு குறைவான மாணவர்களே தனியார் பாடசாலைகளில் கற்கின்றனர். ஜனாதிபதியை தவறாக வழிநடத்தி கல்வி அமைச்சர், அமைச்சரவை பத்திரமொன்றைச் சமர்ப்பித்திருக்கிறார். 

இலவச கல்விக்கு முடிவு கட்டி தனியார் கல்வியை சட்டமாக்கவே இந்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அனுமதி பெற்று இயங்கும் 80தனியார் பாடசாலைகளுக்கு 5கிளைகள் வீதம் ஆரம்பிக்க இதனூடாக அனுமதி கிடைக்கும். 

இதனால் சகல வசதிகளும் கூடிய 400பிரபல பாடசாலைகள் நாடுபூரகவும் ஆரம்பமாகும். ஐ.தே.கவுக்குத் தேவையானவாறு தனியார் துறையில் கூடுதல் அதிகாரம் கிடைக்கும். எனவே கல்வியை தனியார் மயப்படுத்தும் இந்த முயற்சியைக் கண்டிக்கிறோம். இது தொடர்பில் திறந்த விவாதத்திற்கு வருமாறு கல்வி அமைச்சருக்கு சவால் விடுகிறேன்.முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில் என்னுடன் விவாதம் நடத்துவதால் அவருக்கு எந்த கௌரவக் குறைவும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...