இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Related image

2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு இன்று (05) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்றைய தினத்தில், பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட 15 கேள்விகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தொடர்பிலும், மீதொட்டமுல்ல குப்பைமேடு, இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பிலும் இன்று சபையில் பிரஸ்தாபிக்கப்படவுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இந்த வாரத்திற்குள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு! இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு! Reviewed by Ceylon Muslim on February 05, 2019 Rating: 5