மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரியமாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு போராடி வருவதாகக் கூறிய அவர், நொவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாதென்றும் அதற்கு முன்னதாக, தான் ராஜினாமாச் செய்ய மாட்டேன் எனவும் கூறினார்.
பெப்ரல் அமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவற்குத் தவறினால், தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, கடந்த மாதம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்த நிலையிலேயே, மீண்டும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய மாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய Reviewed by Ceylon Muslim on February 15, 2019 Rating: 5