அரச துறை சம்பள முரண்பாடு தொடர்பில் ஆய்வு செய்ய துணைக்குழு
அரச துறையில் உள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை ஆய்வு செய்து இறுதி பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக துணைக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அரச துறையில் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு விசேட சம்பள மதிப்பீட்டு ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் நியமிக்கபட்டது.

இந்த விசேட ஆணைக்குழுவினால் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பில் ஆய்வு செய்து இறுதி பரிந்துரைகளை அமைச்சரவையிடம் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிசிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...