மூதூர் மாணவர்கள் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

மிஹிந்தளை ரஜமஹா விகாரை பகுதிக்குட்பட்ட பழமைவாய்ந்த தூபி ஒன்றின் உச்சியில் நின்று புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின்பேரில் இரண்டு இளைஞர்கள்  பொலிசாரால் சென்ற வாரம்  கைது செய்யப்பட்டு ஒரு வாரத்திற்கு விளக்கமறியல் வைக்கப்பட்டது அறிந்ததே .

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மாணவர்கள் இருவருக்கும் மேலும் ஒரு வாரம் ( பெப் 27 வரை ) விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

18 , 20 வயதான குறித்த மாணவர்கள் இருவரும் நிட்டம்புவ பகுதி  பயிற்சி நிலையத்தில் கல்வி பயிலும் மூதூரை சேர்ந்தவர்கள் 

1. ரஸீன் மொஹமட் ஜிப்ரி (20 வயது) மூதூர்
2. ஜலால்தீன் ரிப்தி அஹமட் (18 வயது) மூதூர்.

ஆகியோர் ஆவர்.
மூதூர் மாணவர்கள் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. மூதூர் மாணவர்கள் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது. Reviewed by Ceylon Muslim on February 20, 2019 Rating: 5