தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து முக்கிய கலந்துரையாடல்


தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை சம்பந்தமான முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெற உள்ளது. 

இன்று மாலை 04 மணியளவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது. 

தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்டியின் பிரதிநிதிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். 

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வீ, இராதகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து முக்கிய கலந்துரையாடல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து முக்கிய கலந்துரையாடல் Reviewed by Ceylon Muslim on February 01, 2019 Rating: 5