வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ரய்னா கைது…

வாழைத்தோட்டம் – வேல்ல வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய ரய்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இவர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் தலைவரான வாழைத்தோட்டம் தினுக்க என்பவருடன் நெருங்கிய தொடர்புள்ள ஒருவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் வசமிருந்த 4 கிராம் ஹெரோயின் மற்றும் வாள் ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ரய்னா கைது… வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ரய்னா கைது… Reviewed by Ceylon Muslim on February 19, 2019 Rating: 5