புல்­வாமா தாக்­கு­தலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை

புல்­வாமா தாக்­கு­தலை ஜெய்ஷ் -–இ–-முகம்மத் அமைப்­புதான் நடத்­தி­யி­ருக்­கி­றது. இதில் பாகிஸ்தான் அர­சுக்கு எந்­த­வி­த­மான தொடர்பும் கிடை­யா­தென பாகிஸ்­தானின் முன்னாள் ஜனா­தி­பதி முஷாரப் தெரி­வித்­துள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநி­லத்தின் புல்­வாமா மாவட்­டத்தில், ஜெய்ஷ் –இ – மு­ம்மத் அமைப்பு நடத்­திய தற்­கொ­லைப்­படைத் தாக்­கு­தலில் இந்­திய துணை இரா­ணு­வப்­ப­டை­யினர் 40 பேர் கொல்­லப்­பட்­டனர். இந்­தியா மட்­டு­மில்­லாமல் சர்­வ­தேச மட்­டத்தில் இந்தத் தாக்­குதல் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேலும் இந்தத் தாக்­கு­த­லினால் இந்­தியா –- பாகிஸ்தான் இடையே நில­விய விரிசல் மேலும் அதி­க­மாகி மோத­லேற்­படும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. அமெ­ரிக்கா, நியூ­சி­லாந்து போன்ற நாடு­களும் இந்தத் தாக்­கு­த­லுக்கு கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.

இந்­நி­லையில் புல்­வாமா தாக்­குதல் குறித்து பாகிஸ்தான் முன்னள் ஜனா­தி­பதி முஷாரப் தனியார் செய்தி நிறு­வனம் ஒன்­றுக்கு பதி­ல­ளித்­தி­ருக்­கிறார். அதில் அவர் பேசும்­போது, ”புல்­வாமா தாக்­குதல் மிகுந்த சோகத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்­க­ளுக்கு இட­மில்லை.

புல்­வாமா தாக்­கு­தலை ஜெய்ஷ் –இ– முகம்மத் அமைப்­பி­னர்தான் செய்­துள்­ளனர். ஜெய்ஷ் –இ –முகமத் அமைப்பின் தலைவர் மசூத் அசார் மீது எந்த பரிவும் எனக்கு இல்லை. இம்­ரான்­கா­னுக்கும் ஜெய்ஷ்–இ–முகம்மத் அமைப்பின் மீது எந்த பரிவும் கிடை­யாது என நினைக்­கிறேன்.

என்னை பொறுத்­த­வரை இந்தத் தாக்­கு­தலில் பாகிஸ்­தா­னுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் என்­னையும் கொலை செய்ய திட்­ட­மிட்டார். இந்­தியா எல்லா தாக்­கு­த­லுக்கும் பாகிஸ்­தானை குற்றம் சொல்வதை நிறுத்த வேண்டும். பிரதமர் மோடிக்கு வீரர்கள் மீது உண்மையான அக்கறை கிடையாது என்றே நான் கருதுகிறேன்” என தெரிவித்தார்.
புல்­வாமா தாக்­கு­தலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை புல்­வாமா தாக்­கு­தலுக்கும், பாகிஸ்தானுக்கும்  தொடர்பில்லை Reviewed by Ceylon Muslim on February 24, 2019 Rating: 5