மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் இன்று டுபாய் நீதிமன்றில் ஆஜர்!

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் இன்றைய தினம் டுபாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

அண்மையில் டுபாயில் ஹேட்டல் ஒன்றில் இடம்பெற்ற இசைக் கச்சேரி நிகழ்வின் போது மாகந்துரே மதூஷ் உட்பட பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரின் மகனான நதீமால் பெரேரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

போதைப் பொருள் பயன்படுத்தியமை மற்றும் போதைப் பொருளை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட குறித்த அனைவரும் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், இன்று அவர்கள் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

எவ்வாறாயினும் அவர்களின் விளக்கமறியல் காலம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்படலாம் என்று பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரின் மகன் நதீமால் பெரேரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார்.

மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் இன்று டுபாய் நீதிமன்றில் ஆஜர்! மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோர் இன்று டுபாய் நீதிமன்றில் ஆஜர்! Reviewed by NEWS on February 28, 2019 Rating: 5