தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை!http://static2.tamilmirror.lk/assets/uploads/image_caa5aef07f.jpgஹொரவ்பொத்தான, கிரலாகல தூபியில் ஏறிப் புகைப்படங்கள் எடுத்தமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேரும், கெப்பித்திகொல்லாவ நீதிமன்றத்தால் இன்று (05) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு, கெப்பிட்டிகொல்லாவ நீதவான் எச்.கே.மாலிந்த ஹர்சன த அல்விஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இம்மாணவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மரங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை, தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்த குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இவற்றில், முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக தலா 1,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும், நீதவான் கட்டளையிட்டார்.

தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை! தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை! Reviewed by Ceylon Muslim on February 05, 2019 Rating: 5