தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

படைப்புழுவினால் பழுதடைந்த சோளத்தைக் கொள்வனவு செய்தால் தண்டனை

உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சோள அறுவடை இடம்பெறும்வரை சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க மாட்டேன் என விவசாய அமைச்சர் பி.ஹரிசன் அறிவித்துள்ளார்.
ஒரு கிலோ சோளத்தின் ஆகக்குறைந்த விலை 45 ரூபா ஆகும். படைப்புழுவின் பாதிப்புக்குள்ளான சோளத்தை கொள்வனவு செய்யும் வியாபார நிறுவனங்களுக்கு எதிராக கடும் தண்டனை விதிக்கப்படுமென்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
படைப்புழு தாக்கத்தால் இடம்பெற்றுள்ள சேதம் தற்போது மாவட்ட மட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்த அறிக்கை கிடைத்தவுடன் இரண்டு வாரங்களில் நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்காக அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளதுடன் தற்போது படைப்புழு தாக்கம் பெருமளவு குறைவடைந்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

Post Top Ad

Your Ad Spot

Pages