இலங்கையிலிருந்து பாகிஸ்தான் செல்லவிருந்த விமானங்கள் இரத்து!

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கான விமானங்கள் இன்றைய தினம் இரத்து செய்யப்படுவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கூறியுள்ளது. 

பாகிஸ்தானின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்க அந்தநாட்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தடை விதித்துள்ளதால் இந்த விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர். 

இந்திய விமானப் படை நேற்று பாகிஸ்தான் வான்பரப்பில் ஊடுறுவி பாகிஸ்தானின் சில பகுதிகளில் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

இலங்கையிலிருந்து பாகிஸ்தான் செல்லவிருந்த விமானங்கள் இரத்து! இலங்கையிலிருந்து பாகிஸ்தான் செல்லவிருந்த விமானங்கள் இரத்து! Reviewed by NEWS on February 27, 2019 Rating: 5