இலங்கை வரலாற்றில் முதற்தடவை : சொத்து விபரங்களை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை பொது வெளியில் வெளிப்படுத்துவதற்கு தன்னிச்சையாக முன்வந்துள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் தாரக பாலசூரிய, வாசுதேவ நாணயக்கார, எம்.ஏ. சுமந்திரன், விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர் எரான் விக்கிரமரத்ன ஆகியவர்களே இவ்வாறு நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்காக முன்வந்துள்ளனர். 

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் கடந்த பல ஆண்டுகளாக சொத்துக்கள் பற்றிய விபரங்களை பொது வெளியில் கொண்டுவருவதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டது. பிரதிநிதிகளின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் திடமாக நிச்சயப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். வெளிப்படுத்தப்பட்ட சொத்து விபரங்களை www.tisrilanka.org/MPassets இல் பார்வையிடலாம். 

இவ்வரலாற்று நிகழ்வில் உரையாற்றி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேக்கர தமது சொத்துக்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக முன்வந்த 5 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வரவேற்பதுடன் அரசியல்வாதிகளின் சொத்துவிபரங்களை பொதுத்தளத்தில் வெளியிடுமாறு கோரி மேற்கொண்ட பிரச்சாரத்தின் மைல்கல்லாக கருதுகின்றோம். 

இந்த செயற்பாடானது ஏனைய மக்கள் பிரதிநிதிகளையும் தமது சொத்து விபரங்களை வெளிப்படுத்துவதற்கு ஊக்குவிப்பதுடன் கேள்விகள் இன்றி பொது நலன் என்ற அடிப்படையில் தகவல்களை வழங்குவது அவசியம் என குறிப்பிட்டார். 

ஒபேசேக்கர இது தொடர்பாக மேலும் கூறுகையில், இது வெளிப்படையான பாராளுமன்றத்தை காட்டுவதுடன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதாகவும் அமைவதுடன் மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும். தகவல்கள் பொதுமக்களின் கரங்களில் சென்றால் நல்லாட்சியின் திறவுகேளாகும் என்பதுடன் ட்ரான்ஸ்பேரன்சி இன்டெர்னஷனலின் நீண்டகால நிலைப்பாடும் இதுவேயாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்