இலத்திரனியல் சுகாதார அட்டை நாளை முதல் விநியோகம்

நோயாளர்களுக்கு இலத்திரனியல் சுகாதார அட்டைகளை வழங்கும் நடவடிக்கை நாளை (21) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.அதற்கமைய முதற்கட்டமாக நாளை (21) காலை 9.00மணிக்கு களுத்துறை பொது வைத்தியசாலையிலும், முற்பகல் 11.00மணிக்கு  பேருவளை தள வைத்தியசாலையிலும், பிற்பகல் ஒரு மணிக்கு பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையிலும் இலத்திரனியல் சுகாதார அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
இதேவேளை, மிக விரைவில் இலங்கையிலுள்ள அனைவருக்கும் இலத்திரனியல் சுகாதார அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார, போஷாக்கு  மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் சுகாதார அட்டை நாளை முதல் விநியோகம் இலத்திரனியல் சுகாதார அட்டை நாளை முதல் விநியோகம் Reviewed by Ceylon Muslim on February 20, 2019 Rating: 5