கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு


இந்தியா கர்நாடகாவில் நாளை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று (20) காலை வட மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டாகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீனை சந்தித்தனர்.

18 பேர் அடங்கிய இலங்கைக் குழுவில் மன்னாரில் முன்னணிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 4 வீரர்களும், 3 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். கவீந்தன், ஹரிஷ், கிஷோதமன், நிரோஜ், திவ்யா, ஜெ திவ்யா, மிலானி ஆகியோரே இந்தக் குழுவில் மன்னார் மாவட்டத்திலிருந்து கலந்து கொள்கின்றனர்.
விளையாட்டுத்துறையில் இலங்கையின் புகழை பெற்றுக் கொடுத்து சாதனைகளை நிலைநாட்ட மன்னார் மாவட்ட வீரர்கள் தமது திறமைகளையும் ஆற்றல்களையும் இந்தப் போட்டியில் வெளிக்காட்ட வேண்டுமெனவும், எதிர்கால வெற்றியின் மூலமே விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் இலங்கை வீரர்கள் இடம்பெறுவதற்கு உத்வேகமளிக்குமெனவும் ரிப்கான் பதியுதீன் இந்த சந்தர்பத்தில் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாரிய பங்களிப்பை நல்கி வருகின்றமைக்கும் யுத்தத்தின் காரணமாக கைவிடப்பட்டிருந்த விளையாட்டு மைதானங்களையும், பாடசாலை மைதானங்களையும் புனரமைப்பதற்கும் பெரும்பாலான பாடசாலைகளில் புதிய மைதானங்களை அமைத்துக் கொடுப்பதற்கும் அவர் ஆற்றிவருகின்ற பங்களிப்புக்கும் மன்னார் மாவட்ட மக்கள் சார்பில் தமது நன்றிகளை தெரிவிப்பதாக விளையாட்டு வீரர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட வீரர்கள் தேசிய ரீதியில் மிளிர்ந்து சர்வதேச ரீதியில் போட்டியில் பங்கேற்பதற்கு பல்வேறு உதவிகளையும், பயிற்சிக்கான விளையாட்டு உபகரணங்களையும் தொடர்ந்து வழங்கி வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக விளையாட்டு வீரர்க்ளை அடிக்கடி சந்தித்து உதவியளித்து உத்வேகப்படுத்தும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுக்கும் அவர்கள் தங்கள் நன்றிகளை இந்த சந்திப்பின் போது தெரிவித்தன. அதுமட்டுமன்றி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் மாகாணசபை உறுப்பினராக இருந்த போது தமது நிதியொதுக்கீட்டின் மூலம் மன்னார் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு வழங்கிய உதவிகளையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு Reviewed by Ceylon Muslim on February 20, 2019 Rating: 5