பெண்கள் முகம் மூடுவதை தடைசெய்ய வேண்டும் - தேசிய காங்கிரஸ் பதில்

தேசிய காங்கிரஸ் கட்சிக்கும் "முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடைசெய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற பட வேண்டும்" என்ற எம்.சி.அஹமட் புர்க்கான் J.P யின் கருத்துக்கும் தொடர்பில்லை. 

முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருக்கும் மேற்படி கருத்தானது அவரின் தனிப்பட்ட கருத்தன்றி கட்சி தளத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்தாலோசனைகளோ, கருத்தாடல்களோ, தீர்மானங்களோ மேற்கொள்ளப்பட வில்லை. 

தேசிய காங்கிரசின் தேசிய பிரதி கொள்கை பரப்பு செயலாளர் எனும் பதவி நிலையை பயன்படுத்தி தனது சொந்த கருத்தை கட்சியின் கருத்தை போல சித்தரிக்க முனைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, இஸ்லாமிய தஃவா இயக்கங்கள், முஸ்லிம் சமூக நிறுவனங்கள் மட்டத்தில் ஆழமாக கலந்தாலோசனை செய்ய வேண்டிய இவ்விடயம் தொடர்பில் கட்சி சாயம் பூச முனைந்திருப்பது விஷமத்தனமானது. 

தேசிய காங்கிரஸ் முஸ்லிம் சமூகம் தொடர்பிலும், சகல இனங்கள் தொடர்பிலும் அக்கறையுடனும், அவதானத்துடனும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. அவ் வகையில் மேற்படி தன்னிச்சையான கருத்தினால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தங்களை தெரிவித்து கொள்கிறது. 

சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் 
கொள்கை, சட்ட விவகார மேலதிக செயலாளர். 
தேசிய காங்கிரஸ்.
பெண்கள் முகம் மூடுவதை தடைசெய்ய வேண்டும் - தேசிய காங்கிரஸ் பதில் பெண்கள் முகம் மூடுவதை தடைசெய்ய வேண்டும் - தேசிய காங்கிரஸ் பதில் Reviewed by Ceylon Muslim on February 22, 2019 Rating: 5