தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 2, 2019

'தமிழர்களுக்கான நீதி கோரி UNHRCஇல் ஒருமித்த குரல்’


எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) அமர்வின் போது, தமிழ்த் தரப்பினர், தமக்கான நீதியை, ஒருமித்த குரலில் ஒரே கோரிக்கையாக முன்வைக்க வேண்டுமென, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான தீர்வு தொடர்பில், தமிழ்த் தரப்பினர், வெவ்வேறான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாதென்றும் கோரிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், ஏனைய தமிழ்த் தரப்பினருடனும் புலம்பெயர் அமைப்புகளுடனும் கலந்துரையாடிச் செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

யாழ். ஊடக அமையத்தில், நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், காணாமல் ஆக்கப்பட்டோர், யுத்தக் குற்றச்சாட்டுகள் போன்ற விடயங்கள், சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணை ஆணையத்தினூடாகவே விசாரிக்கப்பட வேண்டுமென ஐ.நா பேரவை தெரிவித்திருந்ததாகவும் அதற்காக, 4 வருடகால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் கூறிய அவர், எனினும் இலங்கை அரசாங்கம், அதை முற்றுமுழுதாக மறுதலித்து வருவதாகக் குற்றஞ்சாட்டியதோடு, எந்தவிதமான விசாரணை ஆணையங்களும் இதுவரையில் நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த அலுவலக்தை, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கூட, இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் அமைதியான சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில், ஆட்பதிவு நடவடிக்கைகள் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், யாழ்ப்பாணம் - கோப்பாயில்பொலிஸாரால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறனார்.

கோப்பாய் பொலிஸார், வீடு வீடாகச் சென்று, ஒரு படிவத்தை வழங்கி, குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரித்து வருவதாகவும் இது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். 

Post Top Ad

Your Ad Spot

Pages