தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 8, 2019

அதாவுல்லாஹ் - உதுமாலெப்பை பிரிவு (நடந்தவை 01)அஸ்மி அப்துல் கபூர்.

கறுப்பு ஆடு என சிலரால் சிலரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வசனம் காலம் சில உண்மைகளை நேரம் பார்த்து வெளியிடும் போது "பலி ஆடு" என பொருள் படுகிறது.

கடந்த அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதி தவிசாளர் நியமனத்தின் போது அ.இ.ம.கா கட்சி தனது ஆதரவை தேசிய காங்கிரஸ் கட்சியிடமிருந்து விலத்தி மு.காங்கிரஸுக்கு வழங்கியிருந்தது.

காரணம் என்ன?

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது தேசிய காங்கிரஸ் தலைவர் அ.இ. ம. காங்கிரஸை விமர்சித்த போதும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தேர்வின் போது ஆதரவளித்ததுக்கும் தற்போது ஆதரவளிக்காமைக்குமான காரணமாக அ.இ.ம.காங்கிரஸூடன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன் உடன்பாடு கண்டிருந்த தேசிய காங்கிரஸின் முன்னாள் பிரதி தலைவரான உதுமாலெப்பை அப்போது கட்சியில் இருந்தார்.இப்போது இல்லை.

உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் அ.இ.ம.காங்கிரஸூடன் பேசி என்ன உடன்பாடு கண்டிருந்தார்----

ரவூப் ஹக்கீமை வீழ்த்துவோம் 

என்ற கோசத்துடன் முகாவிலிருந்து பிரிந்த ஹசனலி பசீர் போன்றோருடன் ரிசாட் பதியுதீனையும் இணைத்து கொண்டு முஸ்லீம் கூட்டமைப்பு எனும் பெயரில் களமிறங்கலாம் எனும் யோசனை தேசிய காங்கிரஸ் தலைவரிடம் முன் மொழியப்பட்ட போது ஹசனலி பசீர் போன்றோருடன் கூட்டு வைப்பதில் சங்கடங்கலில்லை

என்றும் ஏற்கனவே ரணிலுடன் கூட்டு வைத்துக் கொண்டு 2015 பொதுத்தேர்தலின் போது ரணிலினால் அம்பாரையில் நன்கு திட்டமிட்டு அதாஉல்லாவை தோற்கடிக்க களமிறக்கப்பட்ட ரிசாட் அணி ரணிலின் கூட்டுடன் இருப்பதால் அவர்களுடன் நாம் இணக்கபாட்டுடன் வர முடியாது.

இதையும் ஒரு வகையான அரசியல் நகர்வாகவே அதாஉல்லாஹ் கருதினார்.
இறுதியில் ரிசாட்டுடன் கூட்டு வைத்த ஹசனலி அணியினருக்கு அதாஉல்லாஹ் யூகித்தே நடந்தது.

இந்த நேரத்தில் ரிசாட்டுடன் கூட்டுக்கு அமீரலியால் பேசப்பட்டு தலைவர் அதாஉல்லாவுடன் பேச வைக்கப்பட்டவர் தான் உதுமாலெப்பை.

அதன் பின்னர்,
1. கட்சியை பலவீனப்படுத்த உள்ளுக்குள் இருந்து நடித்திய நாடகங்கள்

2.பஹீஜின் ஆசன ஒதுக்கீடு தொடர்பான முரண்பாட்டை ஊதி பெருக்க வைத்த விதம்

3.இறுதியில் ரிசாட்டுடன் இணைய கட்டம் கட்டமான நகர்வு

4.அஸ்மி அப்துல் கபூர் கருப்பாடு என சொல்லி பலி கொடுக்கப்பட்ட தருணம்

இன்சா அல்லாஹ் தொடராக எழுதலாம் என நினைக்கிறேன். துரோகங்களும் விசுவாசமும் அல்லாத அரசியலில் வெகுநாள் பயணிப்பது தர்மமில்லை

Post Top Ad

Your Ad Spot

Pages