எத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் நேற்று (10) காலை 8.38 மணியளவில் 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது. 

வானில் உயர எழும்பிய விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்தது. இதனால் அவ்விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 

பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து கிடப்பது தெரியவந்தது. 

இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. 149 பயணிகள், விமானிகள் உட்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அஹமத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி எத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி Reviewed by Ceylon Muslim on March 11, 2019 Rating: 5