அடையாளப்படம் 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பாடாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது குறித்த வகுப்பாசிரியர் கையினாலும் தடியினாலும் தம்மை மிகவும் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட குறித்த ஆசிரியர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் குறித்த பாடசாலைக்கு கடமைக்காக வந்ததாகவும் அவருடைய நடவடிக்கை மோசமாக காணப்பட்டதால் இடமாற்றுமாறு பல முறை அதிகாரிகளை கேட்டதாகவும் குறித்த பாடசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share The News

Post A Comment: