மன்/ புத்/ றிஷாட் பதியுதீன் ம.வி யில் 4 மாணவர்கள் 9 A சித்தி....
புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்/ புத் /றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்று  பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த.சா/ த பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.

இப்பாடசாலையில் இருந்து கடந்த ஆண்டு மேற்படி பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்

1.M.F.AFRAH -  9A
2.M.N.NAFRIN  - 9A
3.A.F.NASFA - 9A
4.M.F. RIZKA -9A

ஆகியோர் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்தனர்.

அத்துடன் அதிகமான மாணவர்கள் உயர்தரம் படிக்க தகைமை பெற்றுள்ளனர்.

இப்பாடசாலை கடந்த 2008 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தில் உள்ள அல் காசிமி சிட்டி கிராமத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலை ஆகும்.

இது உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகளில் இச் சாதனை படைத்த மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 இப்பாடசாலையில் பிரதி அதிபராக மிகவும் திறமையுள்ள எம் எம் லாபிர் (BA) அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...