700 கோடி ரூபாய் பெறுமதியான வைரம் மற்றும் இரத்தினக்கற்கள் கொள்ளை; மேலும் இருவர் கைதுசுமார் 700 கோடி ரூபாய் பெறுமதியான வைரம் மற்றும் இரத்தினக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்வத்துக்கு உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் பிலியந்தல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

28 வயதுடைய இரண்டு பேர் இன்றைய தினம் இவ்வாறு பேலியகொடை விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 05ம் திகதி இடம்பெற்றதாக கூறப்பட்டும் இந்தக் கொள்ளை தொடர்பில் பேலியகொடை விசேட விசாரணை பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இருவரில் ஒருவரின் சித்தப்பா, டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துரே மதூஷுக்கு நெருக்கமானவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்