ஆசுகவி அன்புடீனுக்கு இலக்கிய பொன்விழா (அழைப்பு)அன்புடீன், அட்டாளைச்சேனை
எனது விருப்பத்துக்குரிய இலக்கிய நண்பர்களே, சுவைஞர்களே!

எனது உள்ளூர் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எனக்குரிய இலக்கிய பொன்விழா 2019.03.10ஆவது நாள் காலை 09.00 மணிக்கு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு அல் ஷக்கி மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது.

அன்பார்ந்த இலக்கிய நண்பர்களே!
தனிப்பட உங்கள் ஒவ்வொருவருக்கும் அழைப்பு தருவதுதான் முறை.
உங்களை சந்தித்து கைகுலுக்கி கலந்துரையாடி அழைப்பை பகிர்ந்து கொள்ள அவகாசம் போதாமல் இருக்கிறது. அதையும் விட எனது உடல்நிலையும் அதற்கு ஒத்துழைப்பு தரவில்லை.
ஆன காரணத்தினால் இந்த முகநூல் மூலம் உங்கள் ஒவ்வொருவரோடும் உரையாடி அழைப்பு விடுக்கின்றேன்.

உங்கள் வருகை என்னை மிக மகிழ்ச்சியில் ஆழ்த்தும். எனக்கு சுகவாசத்தை தரும். விழா உங்கள் வருகையினால் பெருமை பெறும்.
பேறு பெறும். அருமையான விழா என்று அனைவரும் போற்றுவதற்கு உங்கள் வரவு மிக முக்கியமானது.

வாருங்கள் நண்பர்களே!
வந்து உங்கள் அன்பைத் தாருங்கள்!

உங்கள் வரவுக்காக நானும் விழா ஏற்பாட்டுக் குழுவும் விழியை நீங்கள் வரும் வழி மீது வைத்து காத்திருக்கின்றோம்.

'எல்லோரும் வாழ்வோம் இனிது'

அன்புடன் 
ஆசுகவி அன்புடீன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்