அதாவுல்லாவின் அணியிலிருந்து பஹீஜ் விலகுகிறார்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்ட விவகாரங்களின் செயலாளராக செயற்பட்ட சட்டத்தரணி பஹீஜ் தனது பதவியை இராஜினாம செய்துள்ளதுடன், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீங்கிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தேசிய காங்கிரஸின் முக்கிய புள்ளியாக செயற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கட்சியிலிருந்து நீங்கியதைத் தொடர்ந்து அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


இதனை தனது உத்தியோகபூர்வ முகநூல் ஊடாகவும் அறிவித்து உறுதி செய்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்