வாகன இறக்குமதி : கடன் பத்திரங்களுக்கே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும்

வாகன இறக்குமதிக்காக மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படுகின்ற கடன் பத்திரங்களுக்கே புதிய வரித் திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

இறக்குமதி செய்யப்படுகின்ற பெற்றோல் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு செலுத் திட்ட உரையில் கூறினார். அதன்படி 800 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 150,000 ரூபாவினாலும், 1000 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 175,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளது. 

அத்துடன் 1300 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனுங்களுக்கான இறக்குமதி வரி 500,000 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறாயினும் இந்த வரி அதிகரிப்பானது மார்ச் மாதம் 06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கப்படுகின்ற கடன் பத்திரங்களில் இருந்தே அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்