அமைச்சரவைக்குள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர் ரிஷாத் பதியுதீன் -டலஸ்அமைச்சரவைக்குள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவராக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருக்கின்றார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு அவர் வகித்த அமைச்சு பதவிக்கு மேலதிகமாக தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவறான முன்மாதிரியே.

இதேவேளை தற்போதைய அமைச்சரவையில் மிகவும் அதிர்ஷ்டமான அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் ரிசாட் பதியுதீனே.அரசாங்கத்தின் 5 பிரதான அமைச்சு பதவிகளை அவரே வகிக்கின்றார். அமைச்சு பதவிகளை வகிக்கும்போது நீண்ட வரிகளைக்கொண்ட அமைச்சராக அவர் இருக்கின்றார்.

இது அவர் மீதான நம்பிக்கையையே காட்டுகின்றது, அரச தலைவரும் அரசாங்க தலைவரும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...