டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க விஷேட குழு..

NEWS
0 minute read

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக 07 பேர் கொண்ட விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
To Top