போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை முழுமையாக அமுல்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் நேற்று (13) பாராளுமன்றில் நடைபெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஜனாதிபதி தனது மகளுக்கு வழங்கியுள்ள மதுபானசாலைக்கான உரிமத்தை முதலில் இரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

Share The News

Post A Comment: