மைத்திரிக்கே அனுமதி வழங்க தயாராகும் பொதுஜன ? பசில் உத்தரவு

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச எடுக்கும் இறுதி தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபர் தொடர்பில் மக்களின் விருப்பமும் இருக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டுமாயின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெற வேண்டும். எனினும் எமது கட்சியில் அங்கத்துவத்தை பெறுவது தற்போது இலகுவான காரியமல்ல.

அதற்கு இரண்டு பேரின் அனுமதி தேவை எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டால், அவருக்கு ஆதரவளிப்பீர்களா என எழுப்பிய கேள்விக்கு சிரித்தவாறு பதிலளித்த பசில்,

யாராக இருந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவத்தை பெற்றாக வேண்டும். அதற்கு இரண்டு பேரின் அனுமதி தேவை. அப்படி இருவர் இருந்தால் பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிக்கே அனுமதி வழங்க தயாராகும் பொதுஜன ? பசில் உத்தரவு மைத்திரிக்கே அனுமதி வழங்க தயாராகும் பொதுஜன ? பசில் உத்தரவு Reviewed by NEWS on March 13, 2019 Rating: 5