புத்தளத்தில் கேர்ளா கஞ்சா மீட்பு

அடையாளப்படம் 
புத்தளம் கரம்ப பெரியதீவு பகுதியில் நேற்று (06) இரவு சுமார் 10.30 மணியளவில் 1.7 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கடற்படையினரால் வழங்கப்பட்ட தகவலின் படி புத்தளம், பொலிஸ் மற்றும் போதை மருந்து தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இணைந்து இதனை கைப்பற்றியுள்ளனர். 

குறித்த கஞ்சா பொதி கெப் வண்டி மூலம் கொண்டு செல்லும் போது புத்தளம் கரம்ப பெரியதீவு பகுதியில் வைத்து வண்டியை நிறுத்தி போது சந்தேகத்திற்குரியவர்கள் தப்பி ஓடியுள்ளனர். 

மேலதிக சட்ட நடவடிக்கைகளை புத்தளம், பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...