தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 15, 2019

நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச்சூடு - பலர் பலி {விளையாட்டு வீரர்கள் தப்பியோட்டம்}

Update: 30 பேர் மரணித்துள்ளனர். 

நியூசிலாந்தில் மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பல பேர் பலியாகி இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. 

கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலை தொழுகை நடந்து கொண்டு இருக்கும் போது இராணுவ ஜாக்கெட் போல உடை அணிந்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலின் போது பள்ளிவாசலில் சுமார் 300 பேர் வரை இருந்துள்ளனர். இதனால் எத்தனை பேர் பலியானார்கள் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெறும் போது பள்ளிவாசலில் பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கட் அணி வீரர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எத்தனை பேர் காயம் அடைந்தனர் என்றும் இன்னும் விவரம் வெளியாகவில்லை. அதேபோல் துப்பாக்கி சூட்டை நடத்திய நபர்கள் இன்னும் அதே பகுதியில் சுற்றி வருவதாகவும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் நியூசிலாந்து பொலிஸ் தெரிவித்து உள்ளது. துப்பாக்கி சூடு நடந்த பள்ளிவாசலுக்கு வெளியில் இருக்கும் கார் ஒன்றில் மூன்று குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது அந்த மத்திய பகுதியில் இருந்து பொலிஸார் மக்களை வெளியேற்றி வருகிறார்கள். 

ஹெலிகாப்டர் மூலம் அந்த சந்தேகநபரை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Post Top Ad

Your Ad Spot

Pages