ரணில் - கரு - சஜித் ; ஐக்கிய தேசிய கட்சிக்குள் மும்முனை போட்டி ஆரம்பம்..


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக யார் நியமிக்கப்படுவது என்ற விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மும்முனைப் போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவுக்கின்றன.
ஜனாதிபதி வேட்பாளராக அடுத்த தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள பிரதமர் ரணில் அதற்கான பிரசாரச் செயற்பாடுகளை கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ள நிலையில் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், மலிக் சமரவிக்ரம,சாகல ரத்நாயக்க,சரத் பொன்சேகா ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.
அதேசமயம் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதில் நவீன் திசாநாயக்க,சம்பிக்க ரணவக்க உட்பட்ட பலர் நகர்வுகளை கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய முகம் ஒன்றை இறக்கினால் வெற்றி பெற முடியும் என்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.அதேசமயம் கடந்த கால அரசியல் நெருக்கடியில் மிகவும் பொறுமையாக – சாதுர்யமாக செயற்பட்டதால் உலக நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் ஆதரவு கருவுக்கு இருப்பதாக கருதப்படுவதால் அதனை வைத்து கருவை எழுச்சி பெறச் செய்யலாமென்பது இவர்களின் கருத்தாக இருக்கிறது.
அதே நேரம் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு குழு தீவிர முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment