தெஹிவளையில் அரச வங்கியில் தீ விபத்துதெஹிவளை காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 12.15 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்தை அறிந்து உடனே செயற்பட்ட தெஹிவளை பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். 

தீயினால் உயிர்ச் சேதங்கள் ஏற்படாத போதிலும் ஏற்பட்ட பொருட் சேதம் குறித்து இதுவரை கணிப்பிடப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...