ஐ.எம்.காலித் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.
எம்.வை.அமீர்-

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணிதவியல் பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றும் இப்றாலெப்பை முகம்மட் காலித் அவர்கள் மலேசியாவில் Management And Science பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தில் கடந்த2019- 02-23 ஆம் திகதியன்று இடம்பெற்ற 24 வது பட்டமளிப்பு நிகழ்வின்போது தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

கணணி விஞ்ஞானத்துறையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டும் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் சமர்ப்பித்துள்ள இவர் மர்ஹும் எஸ்.எம். இப்றாலெப்பை மற்றும் குழந்தையும்மா ஆகியோரின் மகனாவார்.(இப்ராகிம்ஸ்)

தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்திலும் அல் மர்ஜான் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை சம்மாந்துறை மத்திய கல்லுரியிலும் பெற்றுக்கொண்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கணணி விஞ்ஞான இளமானிப்பட்டத்தையும் (Bsc) இலங்கை தகவல் தொழில்நுட்பக்கல்லூரியில் முதுமாணிப்பட்டத்தையும் (Msc) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.எம்.காலித் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். ஐ.எம்.காலித் தகவல் மற்றும் தொடர்பாடல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார். Reviewed by NEWS on March 15, 2019 Rating: 5