முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. 

தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொ மனுத் தாக்கல் செய்திருந்தார். 

கடந்த 2009ம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Share The News

Post A Comment: