கிண்ணியாவில் நீர் வசதிகளை வழங்கிய அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பு

அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பினால் கிண்ணியா அல் ஜெஸிரா பெண்கள் அரபுக் கல்லூரி மற்றும் வறிய குடும்பத்திற்கு நீர் வசதி இன்று (27-02-2019) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. அரபுக்கல்லூரியின் செயற்பாட்டாளர் மௌலவி பஸீர் தலைமையில் இந்த திட்டம் நடைப்பெற்ற போது இதில் முன்னாள் வை.எம்.எம்.ஏ தேசியத் தலைவர் காலித் பாரூக், முஸ்லிம் மகளிர் அமைப்பின் தலைவி பவாஸா தாஹா , பொருளாளர் கனிஸ் மாலிக் , OHRD அமைப்பின் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் முஜாஹித் நிசார் , கிண்ணியா நகர சபை உறுப்பினர் முஹம்மது ஹரீஸ் மற்றும் பெண்கள் அரபுக்கல்லூரியின் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். மேலும் சமூக சேவையாளரும் , முன்னாள் வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைவர் காலித் பாரூக் அவர்களின் பங்களிப்பினூடாக வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது

ஊடகப்பிரிவு -


கிண்ணியாவில் நீர் வசதிகளை வழங்கிய அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பு கிண்ணியாவில் நீர் வசதிகளை வழங்கிய  அகில இலங்கை முஸ்லிம் மகளிர் அமைப்பு Reviewed by NEWS on March 01, 2019 Rating: 5