அக்­க­ரைப்­பற்றில் பாடசாலைக்கு சென்ற மாணவி மீது பாலியல் சேட்டை : ஒருவர் கைது

அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்தில் பாட­சா­லைக்கு சென்று கொண்­டி­ருந்த மாண­வி­யொ­ருவர் மீது பாலியல் சேட்டை புரிந்த இரு இளை­ஞர்கள் நேற்று கைது செய்­யப்­பட்­ட­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர்.

இக்­குற்றச் செய­லுடன் தொடர்­பு­பட்ட இரு சந்­தேக நபர்­களும் அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி வி.சிவ­குமார் முன்­னி­லையில் நேற்று ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போது சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் எதிர்­வரும் 19 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அக்­க­ரைப்­பற்று பிர­தே­சத்­தி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யொன்­றுக்கு மாண­வி­யொ­ருவர் சென்று கொண்­டி­ருந்த வேளையில் அப்­ப­கு­தியால் மோட்டார் சைக்­கிளில் சென்று கொண்­டி­ருந்த இளை­ஞர்கள் இருவர் குறித்த மாண­வியின் ஆடை­களை இழுத்து பாலியல் சேட்­டையில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இச்­சம்­ப­வத்­தினை அவ­தா­னித்துக் கொண்­டி­ருந்த அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த குடும்­பஸ்தர் ஒருவர் இக்­குற்றச் செயலைத் தடுக்க முற்­பட்­ட­போது அவ்­வி­ளை­ஞர்கள் இரு­வரும் குறித்த குடும்­பஸ்­தரை சர­மா­ரி­யாகத் தாக்­கி­யுள்­ளனர்.

இவ்­வி­டயம் தொடர்பில் அக்­க­ரைப்­பற்று பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி அஜித் பண்­டா­ரவின் வழி­காட்­ட­லின்கீழ் பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் எம்.எஸ்.அப்துல் மஜீட் தலை­மை­யி­லான பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...