தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 13, 2019

புத்தளம், அறுவைக்காட்டு குப்பை தொடர்பில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்!

புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் , முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை (12) பாராளுமன்ற கட்டட தொகுதியில் முக்கியமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் சர்வமத தலைவர்கள் உள்ளடங்கிய புத்தளம் கிளீன் அமைப்பினரும் புத்தளம் மக்களின் சார்பாக கலந்து கொண்டு, இதனால் புத்தளத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவு படுத்தினர்.

இது தொடர்பில் பிரதமருடன் விரைவில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி பாதிப்பின் உண்மை நிலையை விளக்குவது எனவும் அங்கு முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் சர்வமத தலைவர்களான குசல தம்ப தேரர் , சுந்தர் ராம குருக்கள் , அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் உட்பட புத்தளம் கிளீன் அமைப்பினர், இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி ,அலிசாஹிர் மௌலானா , ரங்கே பண்டார மற்றும் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினர்களான நசீர் , மன்சூர் , முஜீபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், தௌபீக் ,ஹெக்டர் அப்புஹாமி , மஸ்தான் ,அருந்திக்க பெர்னாண்டோ, மரைக்கார், சனத் நிசாந்த, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages