இந்துக்களை இழிவாகப் பேசிய அமைச்சரை ராஜிநாமா செய்ய வைத்த இம்ரான்கான்!பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தகவல் கலாச்சார அமைச்சரும் ஆளும் பிடிஐ கட்சியைச் சேர்ந்தவருமான ஃபயாஸூல் ஹசன் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தார். அவரது கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்த இம்ரான்கான் தன் கட்சி நடவடிக்கையாக அவரை பதவி விலக கோரியிருக்கிறார்.

“ பாகிஸ்தான் தேசியக் கொடியில் உள்ள வெள்ளை நிறம் இந்து மக்கள் இந்த தேசத்திற்காக ஆற்றிய பங்களிப்பிற்காக அவர்களை மரியாதை செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. நமது கொடியின் வெள்ளை நிறமும் முக்கியம்” என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...