புதிய அமைச்சை பொறுப்பேற்றார் அமைச்சர் ரிஷாத்...!

(ஊடகப்பிரிவு)

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக இன்று (27) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நசீர் அஹமட் உட்பட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...