குறைந்த வாகனங்களின் விபரம் இதோ..!வரவுசெலவுத்திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக வாகனங்களின் விலைகள் குறைந்தது 150,000 ரூபாவால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பினால் வாகனங்கள் 150,000 ரூபா முதல் 600,000 ரூபாவரை அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 800CC சுசுக்கி அல்டோ, டெய்சு மிரா, டொயோட்டா பிக்ஸிஸ், ஹொன்டா என் பொக்ஸ் போன்றவை 150,000 வரை அதிகரித்துள்ளது.

1000CC டொயோட்டா வியோஸ், டொயோட்டா பாஸோ போன்றவை 250,000 வரை அதிகரித்துள்ளன. 1300CC வாகனங்கள் 500,000 வரை அதிகரித்துள்ளன.

1500CC ரக டொயோட்டா பீரிமியோ போன்ற வாகனங்கள் 600,000 ரூபா வரை அதிகரித்துள்ளன. ஹைப்பிரைட் 800CC வெகனார் வாகனங்கள் 250,000 ரூபா வரை அதிகரித்துள்ளன.

ஹைபிரைட் 1500CC வாகனங்கள் 500,000 ரூபாவரை அதிகரித்துள்ளன. எனினும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் 175,000 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...