உறங்குகிறதா NFGG?


2015 இல் ஆட்சிமாற்றத்தின் பங்காளிகளாக இருந்து ரணிலின் ஆட்சியைக் கொண்டுவந்து சோனக படித்த மட்டத்தோடு இணைந்து சமூகத்தை மறைமுகமாக பிழையாக வழிநடாத்தியலும் பங்கு கொண்டு நல்லாட்சியை(?) ஏற்படுத்தி இன்று வரை முஸ்லிங்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அத்தனையையும்(சாய்ந்தமருது உள்ளூராட்சி பிரச்சினை, திகனக் கலவரம், மாயக்கல்லி மலை எப்படிப் பல) ரணிலை நடத்த விட்டுவிட்டு அவற்றையும் ஆட்சியில் இல்லாத மகிந்ததான் செய்ய வைத்தார் எனவும் பிரச்சாரம் செய்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு சார்பான அஜண்டாவை கட்சியின் கொள்கையாக செய்து கொண்டிருக்கின்றனர் NFGG யினர். 

எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆளும் கட்சியின் செயற்திறனை ஊக்குவிக்கும் நோக்கிலேயே வட்டாரமுறைத் தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கரைப்பற்றை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மாநாகர சபையில் இல்லாத முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவம் கொண்டுவரும் அபிவிருத்திகளை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் தடுத்துக் கொண்டிருப்பதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருக்கும் வேளையில், ஊருக்கு வரும் அபிவிருத்திகளை தடுப்பது மக்கள் ஜனநாயாக விரோதமாக இருக்கும் போது இதற்கான எதிர்வினையாக பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சியாக NFGG அக்கரைப்பற்று மாநாகர சபையில் இருந்து கொண்டு எதைப் புடுங்கிக் கொண்டிருக்கிறது?

பதியேற்பதும் பதவி விலகுவதும், ஆள்மாறுவதும் , சுழற்சி என்பதும் உறுப்பினராக இருக்க மாதாந்தம் கிடைக்கும் 20000 சம்பளத்துக்காக எனப் பார்த்தால் அதையும் பள்ளிக்குக் கொடுக்கிறோம் பன்சலைக்குக் கொடுக்கிறோம் என்று புதுனம் வேறு காட்டுகிறார்கள். பலமான எதிர்கட்சியாக வர இருந்த தவம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசின் வாய்ப்பையும் தட்டிப்பறித்த மேதாவிகள் இவர்கள். 

“21 முஸ்லிம் நாடாமன்ற உறுப்பினர்கள் இருந்தும் எதையுமே நொட்ட முடியவில்லையே” என தற்போதைய புத்தளம் குப்பைப் பிரச்சினை வரை நல்லாட்சியைக் கொண்டுவந்த சோனகர்கள் மனம் பத்திக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த மாநகர சபைத் தேர்தலில் புதியமாற்றம் புதிய கலாச்சாரம் என பாய்ந்து உழுந்து வந்த NFGG இதுவரையான முஸ்லிங்களின் தேசியப் பிரச்சினைகளுக்கு எடுத்த ஆக்க பூர்வமான நகர்வுகள் எதுவுமில்லை. படுத்தே விட்டானய்யா ரேஞ்சில் குப்பர படுத்துக் குரட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம் கிலாபத்தை இலங்கையில் கொண்டுவர மறைமுகமாகப் போராடும் வீரர்கள். 

இதற்கெல்லாம் காரணம்.

ஊரிலும் வெளிநாட்டிலும் இருந்து கொண்டு இலங்கை அரசு இலங்கை ராணுவம் என பிரித்துப் பேசி, வெளிநாடுகளிடம் கோல்மூட்டி நாட்டை விற்கும் நாட்டுப் பற்றில்லாத குறைந்தது ஊர்ப்பற்றாவது இல்லாத கோட் சூட் போட்டு ஸ்டைலாக இங்கிலிஸ் பேசும் படித்த சோனி ஆதரவாளர்கள். தேர்தல் காலங்களில் வெளிப்படையாகவும் கள்ளத்தனமாகபும் NFGG க்கு ஆதரவாய் பிரச்சாரம் செய்து விட்டு தற்போது அடுத்த தேர்தலை எதிர்ப்பாத்து விரல் சூப்பிக் கொண்டிருக்கிறார்கள். ரோசம் இருந்தால் அவர்களே NFGG எதை நொட்டிக் கொண்டிருக்கிறது என உரக்கட் கேட்டிருப்பார்கள்.

இந்த அசில் அரசியலை அள்ளிக் கொண்டு வரும் போதே இவர்களுக்கெல்லாம் தரமான வார்வக் கட்டை எடுத்திருந்தால் தவம் அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. தேசிய காங்கிரசும் முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து இந்த புதிய கலாச்சார வீரர்களுக்கு தரமான ஆலாத்தி எடுத்து விட்டு உங்கள் பஞ்சாயத்தைத் தொடருங்கள். இல்லா விட்டால் அடுத்த தேர்தலுக்கும் ஏதாவது மசாலத்தை அள்ளிக்கி வருவார்கள்.
உறங்குகிறதா NFGG? உறங்குகிறதா NFGG? Reviewed by NEWS on March 26, 2019 Rating: 5