அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளராக SLMC ஹனீபா தெரிவு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உப தவிசாளராக சற்றுமுன் (07) நடைபெற்ற வாக்களிப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த ஹனீபா  வாக்களிப்பில்  உப தவிசாளரக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு வாக்களிப்பின் ஊடாகவே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

தேசிய காங்கிரஸின் உப தவிசாளர் பதவியிலிருந்து ஜெவ்பர் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஹனீபாவுக்கும், தேசிய காங்கிரஸின் உறூப்பினர் அஜ்மல் ஆகியோருக்கும் இடையில் நடைபெற்ற வாக்களிப்பில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஹனீபா அதிக வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றார்.

இதனை தொடர்ந்து , அட்டாளைச்சேனை பிரதேச சபை முழுமையாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...